வெள்ளி, 13 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 23 மார்ச் 2024 (11:19 IST)

தாம்பரம் சப்-இன்ஸ்பெக்டர் வங்கதேசத்தில் கைது.. தமிழ்நாடு காவல்துறைக்கு வந்த கடிதம்..!

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் சப்-இன்ஸ்பெக்டர்  வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டு இருப்பதாக அந்நாட்டு அரசு தமிழ்நாடு காவல்துறைக்கு கடிதம் எழுதி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தாம்பரம் அருகே உள்ள சேலையூர் என்ற பகுதியில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரியும் ஜான் செல்வராஜ் என்பவர் கடந்த சில நாட்களாக மருத்துவ விடுப்பில் சென்று இருப்பதாக கூறப்பட்டது. இவர் சமீபத்தில் காவல்துறை உயர் அதிகாரிக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய மருத்துவம் விடுப்பை நீடிக்குமாறு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் வங்கதேச அரசிடம் இருந்து தமிழ்நாடு காவல்துறைக்கு வந்த கடிதத்தில் சப் இன்ஸ்பெக்டர் ஜான் செல்வராஜ் வங்கதேச எல்லையில் எல்லையை கடக்க முயன்றதாக கைது செய்யப்பட்டார் என்றும் அவரிடம் விசாரணை நடந்து வருவதாகவும் தகவல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஒரு முறை சேலையூர் சப் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாக தகவல் வெளியான நிலையில் தற்போது வங்கதேச எல்லையை ஏன் அவர் கடக்க முயன்றார்? அவருக்கும் சட்டவிரோதமாக செயல்படும் நபர்களுக்கும் சம்பந்தம் உள்ளதா? என்பது குறித்து தற்போது விசாரணை நடந்து வருகிறது.

Edited by Mahendran