வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 நவம்பர் 2024 (10:39 IST)

என்ன ஹேர் ஸ்டைல் இது? காதலியை தேடிச் சென்று கொன்ற காதலன்! - அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்!

crime

அமெரிக்காவில் காதலியின் ஹேர் ஸ்டைல் பிடிக்காததால் காதலன் தேடிச் சென்று அவரை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

உலகம் முழுவதும் காதலன் - காதலி இடையே பல்வேறு விஷயங்கள் காரணமாக சண்டைகள் மூள்வதும், சில சம்பவங்கள் கொலை வரை செல்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. ஆனால் சின்ன விஷயங்களுக்காக கூட அப்படியான கொலை சம்பவம் நடப்பது அதிர்ச்சியை அளிப்பதாகவே உள்ளது. அப்படியான ஒரு சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தை சேர்ந்தவர் பெஞ்சமின். இவரும் சில்வா என்ற இளம்பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளனர். சமீபத்தில் சில்வா தனது ஹேஸ் ஸ்டைலை மாற்றிக் கொள்ள விரும்பி, வேறு ஹேர் ஸ்டைல் மாற்றியுள்ளார். ஆனால் அது பெஞ்சமினுக்கு பிடிக்காமல் இருந்துள்ளது.

 

தன்னை கேட்காமல் ஹேர் ஸ்டைல் மாற்றியது குறித்து சில்வாவிடம் அவர் சண்டை போட, சில்வாவும் பதிலுக்கு சண்டை போட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதால் அங்கிருந்து வெளியேறிய சில்வா தனது அண்ணன் வீட்டில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் சில்வாவால் ஆத்திரம் தீராமல் இருந்த பெஞ்சமின் நேராக சில்வாவின் அண்ணன் வீட்டிற்கே சென்று, சில்வாவை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுள்ளார். தடுக்க வந்த சில்வாவின் அண்ணனுக்கும் சரமாரியாக கத்திக்குத்துகள் விழுந்துள்ளது.

 

இதில் சில்வா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், அவரது அண்ணன் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Edit by Prasanth.K