வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 24 ஜனவரி 2024 (08:59 IST)

நாளை தைப்பூச திருவிழா! திருச்செந்தூரில் சிறப்பு பூஜைகள், சுவாமி வீதி உலா!

Tiruchendur
நாளை முருகபெருமானுக்கு உகந்த தைப்பூச திருவிழா கொண்டாடப்பட உள்ள நிலையில் இன்றே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.



முருகபெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளை தைப்பூச திருவிழா நடைபெறும் நிலையில் அதிகாலை 1 மணிக்கே நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெறுகிறது. அதிகாலை 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது. காலை 7.30 மணிக்கு அஸ்திரதேவர் தீர்த்தவாரி நிகழ்வும், 10 மணிக்கு உச்சிக்கால அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது.

பின்னர் அலைவாயுகந்த பெருமான் வடக்கு ரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்தில் எழுந்தருளி தங்கமயில் வாகனத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார்.
தைப்பூசத்திற்கு பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள் என்பதால் முன் தயாரிப்பு ஏற்பாடுகள், அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

Edit by Prasanth.K