செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 11 அக்டோபர் 2025 (13:19 IST)

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், பாஜகவை ஈபிஎஸ் கழட்டிவிட்டுவிடுவார்: டிடிவி தினகரன்

அதிமுக கூட்டணிக்கு விஜய் வந்தால், பாஜகவை ஈபிஎஸ் கழட்டிவிட்டுவிடுவார்: டிடிவி தினகரன்
அதிமுகவுடன் கூட்டணி வைப்பதன் மூலம் சட்டமன்றத்திற்குள் நுழைய விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தசூழலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கூறியுள்ள ஒரு கருத்து, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
அதிமுக - பாஜக கூட்டணியில் தமிழக வெற்றிக் கழகம் இணைய பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறப்படும் நிலையில், இந்த கூட்டணிக்குள் விஜய் இணைந்தால் ஒரு நிபந்தனை விதிக்கலாம் என்று கூறப்படுகிறது. அதாவது, ADMK கூட்டணியில் இருந்து BJP வெளியேற வேண்டும் என்பதே அந்த நிபந்தனையாக இருக்கலாம் என்று அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் ஊகங்கள் நிலவுகின்றன.
 
ஒருவேளை விஜய் அப்படி ஒரு நிபந்தனை விதித்தால், எடப்பாடி பழனிசாமி பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றிவிட தயாராக இருப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த கருத்தைத்தான் இன்று தனது பேட்டியில் டி.டி.வி. தினகரன் உறுதிப்படுத்தும் வகையில் பேசினார். அவர், "துரோகத்திற்குப் பெயர் போனவர் எடப்பாடி பழனிசாமி. ஒருவேளை விஜய் ADMK கூட்டணிக்கு வந்தால், கண்டிப்பாக அவர் பாஜகவை கூட்டணியில் இருந்து கழற்றி விட்டு விடுவார்" என்று கூறியது அரசியல் களத்தில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
 
Edited by Mahendran