செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth K
Last Modified: வெள்ளி, 10 அக்டோபர் 2025 (13:11 IST)

வாட்டர்மெலன் திவாகர்லாம் ஒரு ஆளா? பிக்பாஸையே கழுவிய ஆதிரை! - முதல் எலிமினேஷன் யார்?

watermelon star

பிக்பாஸ் சீசன் 9 தொடங்கி ஒரு வாரம் ஆகப்போகும் நிலையில் இப்போதுதான் ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. 

 

இந்த ஒரு வாரக் காலத்திலும் இன்னும் ஆடியன்ஸ் கண்ணில் படாத போட்டியாளர்களாக சிலர் உள்ளனர். குக் வித் கோமாளி மூலம் பிரபலமான கனி, பிக்பாஸ் வீட்டுக்கு வந்தும் சமைப்பதை மட்டுமே செய்து வருவதால் டாஸ்க்கில் அவர் வெளியே தெரிவதில்லை. தண்ணீர் டாஸ்க்கை ஃபாலோ செய்து வரும் சபரிநாதனுக்கு உள்ளே நல்ல மதிப்பு இருந்தாலும், கண்டெண்ட் செய்வதில் அவர் ஸ்லோவாகவே உள்ளார். சமீபமாக தண்ணீர் டாஸ்க் சொதப்பியதில் இருந்து கொஞ்சம் வெளியே தெரிய தொடங்குகிறார். துஷார், அப்சரா, சுபிக்‌ஷா, கானா வினோத் எந்த சண்டையிலும் வேடிக்கை பார்ப்பவராகவே இருக்கிறார்கள். இவர்களில் ஒருவர் முதல் வாரத்திலேயே எலிமினேட் ஆக வாய்ப்புகள் அதிகம்.

 

வாட்டர்மெலன் ஸ்டார், விஜே பார்வதி, கெமி, ப்ரவீன் உள்ளிட்டவர்கள் வந்தது முதலே கண்டெண்ட் ஆகிவிட்டார்கள். விக்கல்ஸ் விக்ரம் ஆங்காங்கே சற்று தெரிந்தாலும் முழுவதுமாக கேமில் இறங்காதது போல தெரிகிறார்.

 

ப்ரவீன் காந்தி ஷோவின் டிஆர்பியை ஏற்ற அரோராவிடம் நாம் காதலிக்கலாம் என்று கூற எல்லாருக்கும் ஷாக். இது டிஆர்பியை ஏற்றவா அல்லது ப்ரவீன் காந்தி ரூட் விடுகிறாரா என மீம்ஸ்கள் பறக்கத் தொடங்கிவிட்டது. 

 

ஆரம்பம் முதலே பலருக்கும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் மீது அதிருப்தி உள்ள நிலையில், ஆதிரையின் பேச்சில் அது அப்பட்டமாக வெளிபட்டுள்ளது. அகோரி கலையரசனிடம் இதுபற்றி பேசும்போது அவர் “நடிப்புன்னா என்னன்னே தெரியாம, பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் அவமதிக்கிற மாதிரி பேசிட்டு இருக்காரு. இவரெல்லாம் இந்த பிக்பாஸ்ல வர என்ன தகுதி இருக்கு. யார் வேணா என்ன வேணா பண்ணி பேமஸ் ஆயிட்டா இந்த ப்ளாட்பார்ம்குள்ள வந்திடலாம்னு இந்த ஷோ சொல்ல வருதா” என பிக்பாஸ் நிகழ்ச்சி மீதே ஒரு விமர்சனத்தை வைத்துவிட்டார்.

 

இதற்கு இந்த வார இறுதியில் விஜய் சேதுபதி கண்டிப்பாக பதில் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K