தொடர்புடைய செய்திகள்
- மாடர்ன் உடையில் அசத்தும் மாளவிகா மோகனின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட்!
- அது தெரியாமல்தான் கேமரா முன்னால் நின்றேன்… 22 ஆண்டுகள் நிறைவு செய்தது குறித்து நயன்தாரா நெகிழ்ச்சி!
- ராஷி கண்ணா கார்ஜியஸ் கிளிக்ஸ்… வைரல் ஆல்பம்!
- க்ரீத்தி ஷெட்டியின் அழகியப் புகைப்படத் தொகுப்பு!
- நடிகை விஜயலட்சுமியிடம் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்ட சீமான்.. வழக்கை முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்..!
விஜய்யை ஜோக்கர் என விமர்சித்தாரா ஸ்ருதிஹாசன்?... சர்ச்சையானப் பதிவு!
தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடித்தார்.
சமீபத்தில் ரிலீஸான கூலி திரைப்படத்தில் ரஜினிகாந்தின் மகளாக அவர் நடித்திருந்தார். ஆனால் அவரது கதாபாத்திரம் ரசிகர்களால் மோசமாக ட்ரோல் செய்யப்படும் அளவுக்கு பலவீனமாக இருந்தது. இந்நிலையில் ஸ்ருதிஹாசன் தற்போது தன்னுடைய சமூகவலைதளப் பதிவு ஒன்றின் காரணமாக வைரல் ஆகியுள்ளார்.
அவரது இன்ஸ்டாகிராம் பதிவில் “ஒரு கோமாளியைக் கோமாளி போல நடிப்பதற்காக விமர்சிக்கக் கூடாது. நம்மை நாமேதான் சர்க்கஸுக்கு சென்றதற்காக குறை சொல்லிக் கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். சமீபத்தில் விஜய் கரூர் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழக அரசியலில் விவாதத்தையும் பல சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் ஸ்ருதியின் இந்த பதிவு விஜய்யைதான் கோமாளி என்று சூசகமாக விமர்சிப்பதாக ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
அடுத்த கட்டுரையில்
