விரைவில் பழிவாங்குவேன் ; ஆவியாக வந்த சுவாதி : திகிலூட்டும் ஆவி மீடியேட்டர்

விரைவில் பழிவாங்குவேன் ; ஆவியாக வந்த சுவாதி


Murugan| Last Updated: செவ்வாய், 23 ஆகஸ்ட் 2016 (11:41 IST)
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் படுகொலை செய்யப்பட்ட சுவாதி ஆவியிடம் தான் பேசியதாகவும், அவர் கொலையாளிகளை விரைவில் பழி வாங்குவேன் என்று கூறியதாகவும் தெரிவித்து ஒருவர் பீதியை கிளப்பியுள்ளார்.

 

 
ஆவி அமுதன் என்பவர் அவ்வப்போது, ஆவிகளிடம் தான் பேசி வருவதாக கூறி பரபரப்பை கிளப்பி வருபவர் ஆவார். கடந்த சட்டசபை தேர்தலின் போது, ஜெயலலிதாதான் முதல்வர் என்று எம்.ஜி.ஆர் ஆவி தன்னிடம் கூறியதாக பரபரப்பை ஏற்படுத்தியவர்.  
 
அதேபோல், ஆப்ரஹாம் லிங்கன், லெனின், இந்திராகாந்தி ஆகிய ஆவிகளிடம் தான் எப்போது வேண்டுமானாலும் பேசுவேன் என்று கூறிவருகிறார். 
 
இந்நிலையில் ஒரு செய்தியாளரிடம் பேசிய அவர், தான் சுவாதி ஆவியிடம் பேசியதாக தெரிவித்தார். அவரிடம் பேசிய சுவாதி, தான் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், தன்னை கொலை செய்தவர்களை விரைவில் பழி தீர்ப்பேன். அப்போதுதான் என் ஆத்மா சாந்தி அடையும் என்று கூறியதாம்.


 

 
மேலும், ராம்குமார் மிகவும் அமைதியானவன், தன்னை கொன்றவர்கள் சட்டத்திலிருந்து தப்பித்தாலும், என்னிடம் இருந்து தப்ப முடியாது. வருகிற அமாவசைக்கு பின் நான் பழிவாங்கும் வேலையை ஆரம்பிக்கப்போகிறேன் என்று சுவாதி கூறியதாக அவர் கூறி பீதியை கிளப்புகிறார்.
 
அதேபோல், உண்மையான குற்றவாளி யார் என்பதை பலி வாங்கிவிட்டு சொல்கிறேன் என்று கூறியுள்ளதாம் சுவாதி ஆவி.


இதில் மேலும் படிக்கவும் :