1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 மார்ச் 2024 (14:04 IST)

பல் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைப்பா? சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு?

பல் மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வை ஒத்திவைக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் திட்டமிட்டபடி வரும் 18ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளதை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது.  
 
 2024 ஆம் ஆண்டுக்கான முதுகலை பல் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மார்ச் 18-ம் தேதி  நடைபெறும் என அறிவிக்கப்பட்டதை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் இந்த தேர்வு ஜூலை மாதத்திற்கு ஒத்திவைக்கப்படலாம் என  கூறப்பட்டது. 
 
முதுநிலை பல் மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒத்திவைக்கவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்ட நிலையில் இந்த தேர்வை ஒத்தி வைக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. இந்த தேர்வை நாடு முழுவதும் சுமார் 20,000 மாணவர்கள் வரும் 18ஆம் தேதி தேர்வெழுத உள்ளனர்
 
இந்த தேர்வு குறித்த மேலும் தகவல்களுக்கு  http://natboard.edu.in என்ற இணையதளத்தை அணுகலாம்  
 
Edited by Mahendran