திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2023 (14:49 IST)

ஆர்.எஸ்.எஸ் பேரணி.. தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவு..!

rss rally
ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ள நிலையில் தமிழக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது.
 
இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து உள்ளது.
 
ஆர்எஸ்எஸ் பேரணி நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் வாதாடியது. இந்த நிலையில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி வழங்கிய உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக  உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த நிலையில் இதில் முக்கிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. 
 
ஆர்எஸ்எஸ் பேரணி குறித்து நவம்பர் 15ஆம் தேதிக்குள் தமிழக அரசு முடிவு எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. மேலும் பேரணிக்கு அனுமதி கோரி  புதிய கோரிக்கை வைக்க ஆர்எஸ்எஸ் அமைப்புக்கும் உச்சநீதிமன்ற உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran