அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிரான வழக்கு: சுப்ரீம்கோர்ட் முக்கிய உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி டிரைவர் கண்டக்டர்களுக்கு வேலை வாங்கி தருவதாக லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டது
இந்த வழக்கு கடந்த 1ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் சென்னை ஐகோர்ட் ரத்து செய்த இந்த வழக்கை மீண்டும் நடத்த வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டது
இந்த மேல்முறையீடு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக பண மோசடி வழக்கை முடித்து வைத்த சென்னை ஐகோர்ட்டின் உத்தரவை ரத்து செய்யப்படுவதாகவும் பண மோசடி வழக்கை தொடர்ந்து விசாரணை செய்ய வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த தீர்ப்பு செந்தில்பாலாஜி மிகப்பெரியது என்று கூறப்படுகிறது