சிவசங்கர் பாபாவுக்கு எச்சரிக்கையுடன் ஜாமின் வழங்கியது உச்சநீதிமன்றம்!
பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவுக்கு எச்சரிக்கையுடன் உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்துள்ளது.
சென்னை அருகே உள்ள கேளம்பாக்கம் சுஷில் ஹரி என்ற பள்ளியை நடத்தி வந்த சிவசங்கர் பாபா மீது மாணவிகள் சிலர் பாலியல் குற்றச்சாட்டை கூறினார்கள்.
இதனை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது
மேலும் சாட்சிகளை கலைத்தால் ஜாமீன் ரத்து செய்யப்படும் என்ற எச்சரிக்கையுடன் தான் உச்சநீதிமன்றம் சிவசங்கர் பாபாவுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது