வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By K.N.Vadivel
Last Updated : வியாழன், 16 ஜூன் 2016 (16:00 IST)

ரஜினிக்கு என்னாச்சு? திரையுலகில் பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு என்னாச்சு? திரையுலகில் பெரும் பரபரப்பு

சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நிலை வெளியான தவறான தகவல் வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
 

 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 2.0 படத்திற்காக அமெரிக்கா சென்றார். அங்கு தனது குடும்பத்தினருடன் விடுமுறையை கழித்தார்.
 
இந்த நிலையில் ரஜினிகாந்த் அங்கு மரணம் அடைந்துவிட்டதாக இலங்கையைச் சேர்ந்த ஒரு செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டது. இதனால் தமிழ் திரையுலகம், ஹாலிவுட், டோலிவுட் தரப்பினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். அதைவிட அவரது ரசிகர்கள் பலர் இரத்தக் கண்ணீர் வடித்தனர்.
 
இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினி உடல் நிலை குறித்து, தவறான தகவல் வெளியிட்டவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, சென்னை காவல்துறையில் ரஜினிகாந்த் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினி நன்கு ஆரோக்கியமாக இருப்பதாக கபாலி படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
 
விரைவில் ரஜினி நடித்த கபாலி திரைப்படம் வெளிவரயுள்ள நிலையில், இது போன்ற சம்வங்கள் அவரை உண்மையிலேயே காயப்படுத்துவதாக அவரை நன்கு அறிந்தவர்கள் கொட்டித்தீர்க்கின்றனர்.