திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 14 டிசம்பர் 2021 (14:09 IST)

கரூர், நாமக்கலில் கேட்ட பயங்கர சத்தம்..! – மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!

கரூர், நாமக்கலில் கேட்ட பயங்கர சத்தம்..! – மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம்!
இன்று காலை கரூர், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் கேட்ட பயங்கர சத்தம் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

இன்று காலை 11 மணியளவில் கரூர் மற்றும் நாமக்கல் மாவட்ட பகுதிகளில் திடீரென பயங்கரமான சத்தம் கேட்டது. இதனால் அம்மாவட்ட மக்கள் பீதியில் ஆழ்ந்தனர். இந்நிலையில் இது நிலநடுக்கமா அல்லது எதனால் அந்த சத்தம் ஏற்பட்டது என விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் பயங்கர சத்தம் குறித்து விளக்கம் அளித்துள்ள நாமக்கல் மாவட்ட ஆட்சியர், வானில் சென்ற சூப்பர்சோனிக் விமானத்தால் ஏற்பட்ட சத்தம் அது என்று தகவல் கிடைத்துள்ளதாக கூறியுள்ளார்.