திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: செவ்வாய், 29 அக்டோபர் 2019 (14:23 IST)

சுஜித் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் நிதியுதவியை வழங்கிய ஸ்டாலின்..

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சுஜித்தின் குடும்பத்திற்கு திமுக சார்பாக ரூ.10 லட்சத்தை நிதியுதவியாக வழங்கினார் முக ஸ்டாலின்

திருச்சி நடுகாட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித் என்ற சிறுவனை, 80 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, சடலமாக மீட்டனர். இதனை தொடர்ந்து சுஜித்தின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு ஃபாத்திமாபுதூர் கல்லறையில் நல்லடக்கம் செய்யபட்டது.

இந்நிலையில் சுஜித்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் முக ஸ்டாலின், சுஜித்தின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவியாக வழங்கினார். அதன் பின்பு நிரூபர்களை சந்தித்த ஸ்டாலின், ”சுஜித்தை மீட்க ஏன் ராணுவத்தை அழைக்கவில்லை??” என தனது கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.