1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (12:47 IST)

சுசித்ரா வெளியிட்ட வைரல் வீடியோ - இணையத்தில் பரபரப்பு

பிண்ணனிப் பாடகி சுசித்ரா வெளியிட்டுள்ள புதிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


 

கடந்த ஏபரல் மாதம், சுசித்ராவின் டிவிட்டர் கணக்கிலிருந்து பிரபல சினிமா நடிகர்கள் மற்றும் நடிகைகளின் அந்தரங்கப் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், தன்னுடைய டிவிட்டர் கணக்கு மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டு, அதில் புகைப்படங்கள் வெளியாகி வருவதாகவும், அதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என சுசித்ரா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டது. 
 
அதன் பின் சுசித்ரா சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களின் முன்பு தலைகாட்டமால் இருந்தார். 
 
இந்நிலையில், தற்போது அவர் புதிய விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் இந்த நடிகைகள் குறித்த வீடியோ இல்லை. அவரது பாடல் வீடியோவை வெளியிட்டுள்ளார். அன்புள்ள மான் விழியே என்ற பாடல் ஆல்பம் வீடியோவை வெளியிட்டுள்ளார்.