வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 5 ஜூலை 2018 (17:49 IST)

தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? மாலை போடுவதும், புகைப்படம் எடுப்பதும் அரசியல் இல்லை: சு.சுவாமி அதிரடி!

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தமிழகத்தில் தாமரை மலரும் என தெரிவித்து வருகிறார். ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார். 
 
பாஜகவின் மூத்த தலைவரும், ராஜ்யசபா உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 2019 ஆம் ஆண்டு தேர்தலுக்கு பாஜக யாருடன் கூட்டணி வைக்கும் என கேள்வி எழுப்பப்பட்டது. 
 
இதற்கு அவர் கூறிய பதில் பின்வருமாறு... தமிழகத்தில் பாஜக இருக்கிறதா? இங்கே அது வெறும் ஹாஸ்பிடாலிட்டி நிறுவனம் போலத்தானே அங்கு செயல்பட்டு வருகிறது. யாரையாவது போய் சந்திப்பது, மாலை போடுவது, புகைப்படம் எடுத்துக் கொள்வது, இப்படித்தானே அவா்கள் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். 
 
தமிழக பாஜக தலைமையில் மாற்றம் இல்லை என்றால் தமிழக பாஜகவில் மீண்டும் அதே மாதிரியான நிலைமைதான் நீடிக்கப் போகிறது. கட்சிக்கான பலன்களைக் கொண்டு வராதவா்கள் யாரோ, அவா்களை எல்லாம் வெளியேற்ற வேண்டும். அப்படி புதிதாக யாரையாவது கொண்டு வந்தால்தான் பாஜகவுக்கு தமிழகத்தில் எதிரா்காலம் இருக்கும் என்று கூறினார். 
 
சுப்பிரமணியன் சுவாமியின் இந்த கருத்து நேரடியாக தமிழிசை சவுந்தரராஜனை விமர்சிப்பது போல் உள்ளது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.