திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (13:22 IST)

தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும் - வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

 
கடந்த சில நாட்களாகவே சென்னை, சேலம் உட்பட தமிழகத்தின் சில இடங்களில் அவ்வப்போது குறிப்பாக இரவு நேரங்களில் மழை பெய்து வந்தது. நேற்று இரவு சென்னையின் பல பகுதிகளில் சில மணி நேரங்கள் கனமழை கொட்டித் தீர்த்தது. இதில், சென்னையின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.
 
இந்நிலையில், தமிழகம், கர்நாடகா ஜம்மு-காஷ்மீர், உத்தரகாண்ட், பஞ்சாப், ஹரியானா, ஹிமாசலப் பிரதேசம், அருணாசலப் பிரதேசம், திரிபுரா, ராயலசீமா மற்றும் கர்நாடகத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று கனமழை பெய்யும் என இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.