போரிஸ் ஜான்சன் வருகை ரத்து குறித்து சுப்ரமணியன் சுவாமி ட்வீட்

subramaniya swamy
போரிஸ் ஜான்சன் வருகை ரத்து குறித்து சுப்ரமணியன் சுவாமி ட்வீட்
siva| Last Updated: செவ்வாய், 5 ஜனவரி 2021 (19:25 IST)
டெல்லியில் இம்மாதம் 26ஆம் தேதி நடைபெற இருக்கும் குடியரசு தின விழாவில் இங்கிலாந்து நாட்டின் பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது என்பதும் அந்த அழைப்பை ஏற்று அவர் வருகை தர ஒப்புக் கொண்டிருந்தார் என்பதும் தெரிந்ததே
ஆனால் சற்று முன் வெளியான தகவலின்படி இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக இந்திய வருகையை போரிஸ் ஜான்சன் ரத்து செய்துவிட்டார் என்று தெரியவந்தது இதனை அடுத்து இந்த ஆண்டு நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பு விழாவில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொள்ளமாட்டார் என்று அறிவிக்கப்பட்டது

இந்த நிலையில் இதுகுறித்து பாஜக ராஜ்யசபா எம்பி சுப்பிரமணியன் சாமி தனது டுவிட்டரில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் குடியரசு தின அணிவகுப்பை பிரதமர் மோடியின் அரசு ரத்து செய்ய வேண்டும் என்றும் அணிவகுப்பில் பங்கேற்பவர்களின் நலன் கருதி இதை செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் அவர்களை 2022ஆம் ஆண்டு குடியரசு தின விழாவுக்கு அழைக்கலாம் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார். சுப்பிரமணிய சாமியின் இந்த டுவிட்டர் போது வைரலாகி வருகிறது


இதில் மேலும் படிக்கவும் :