வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By bala
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2017 (12:07 IST)

ஸ்டாலினுடன் தினகரன் கூட்டணி ஆட்சி- சுப்ரமணியன் சாமி தகவல்

ஸ்டாலினுடன் கூட்டணி ஆட்சியை விரைவில் தினகரன் அமைப்பார் என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியன் சாமி தெரிவித்துள்ளார்.


 


அதிமுகவின் இரு அணிகளுன் இணைந்த பின்பு, அவர்களுக்கும் தினகரன் தரப்பிற்கும் தொடர் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அவர் வசம் 20 எம்.எல்.ஏக்கள் இருக்கிறார்கள் எனக் கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் உல்லாச விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதேபோல்,எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளை ஒருவர் பின் ஒன்றாக பதவி நீக்கம் செய்து வருகிறார் தினகரன்.

அதுமட்டுமின்றி இன்று கூடிய அதிமுக கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை கட்சியிலிருந்து  ஒதுக்குவது என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினகரன் வழக்கறிஞர்களுடன் தற்போது ஆலோசனையில்  ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதில்  திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் டிடிவி தினகரனும் இணைந்து சில நாட்களில் கூட்டணி ஆட்சி அமைப்பார்கள் என்று கூறியுள்ளார். திமுகவுடன் தினகரன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார் என தகவல்களை வந்த சூழ் நிலையில் சுப்ரமணியன் சாமி டுவிட்டர் பதிவு அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.