1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 9 நவம்பர் 2019 (22:01 IST)

ஒரே ஒரு டுவீட் போட்டு வாங்கி கட்டுக்கொள்ளும் சுப.வீரபாண்டியன்

இன்று வெளியாகியுள்ள அயோத்தி வழக்கின் தீர்ப்பை இஸ்லாமியர்கள் அமைப்பும் ஏற்றுக்கொள்வதாக அறிவித்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதில்லை என அறிவித்துள்ளது. ஆனால் இந்த தீர்ப்பால் பிரச்சனை ஏற்படும் என்று ஆசையுடன் காத்திருந்த ஒருசில அரசியல்வாதிகள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர். இருப்பினும் தங்களால் முடிந்த அளவுக்கு இரு மதத்திற்கு இடையே சிண்டுமுடியும் வேலையை செய்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தன்னை பகுத்தறிவாளர் என்று கூறிக்கொள்ளும் சுப வீரபாண்டியன் இன்று ஒரு டுவிட்டை பதிவு செய்துள்ளார். அதில், ‘வெங்காய விலையைக் கட்டுப்படுத்த, துபாய், துருக்கி நாடுகளிலிருந்து மத்திய அரசு வெங்காயம் இறக்குமதி செய்கிறதாம்.  முஸ்லீம் நாட்டு வெங்காயத்தை இங்குள்ள மானஸ்தர்கள் ஏற்க மாட்டார்களே! ஒரு வேளை அது காவிச் சாயம் பூசப்பட்ட வெங்காயமோ!! என்று கேள்வி எழுப்பி இந்த டுவீட்டை எச்.ராஜாவுக்கும் டேக் செய்துள்ளார்.
 
சுப வீரபாண்டியனின் இந்த டுவீட்டுக்கு ஒருவர் கூட ஆதரித்து கமெண்ட் பதிவு செய்யவில்லை. நெட்டிசன்கள் அவரை வச்சு செய்து வருகின்றனர். அனேகமாக இந்த டுவீட்டை அவர் விரைவில் டெலிட் செய்யவும் வாய்ப்பு உள்ளது