திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Dinesh
Last Modified: திங்கள், 18 ஜூலை 2016 (14:23 IST)

நண்பனை கொலை செய்து ஏரியில் வீசிய மாணவர்கள்

நண்பரின் மனைவியுடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட நண்பனை, கொலை செய்து ஏரியில் வீசிய மாணவர்கள் உள்பட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

 


செங்கல்பட்டு அருகே உள்ள  ஆத்தூர், குப்பம் சாலையில் உள்ள ஏரியில் கடந்த மாதம் 26-ந் தேதி  சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் பிணமாக கிடந்தார். அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று தெரியாமல் இருந்தது. இதையடுத்து அந்த வாலிபரின் புகைப்படத்தை அனைத்து  காவல் நிலையங்களுக்கும் அனுப்பி வைத்து செங்கல்பட்டு தாலுக்கா காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினர். ஒரு மாதத்திற்கு பின்னர் தற்போது அவரின் மனைவி டில்லிராணி அவரின் புகைப்படத்தை பார்த்து அடையாளம் காட்டினார்.

இதையடுத்து, அவர் காஞ்சிபுரத்தை அடுத்த ஏனாத்தூர், சமத்துவபுரத்தை  சேர்ந்த கூலித்தொழிலாளி மணிகண்டன் என்பது தெரிந்தது. இந்நிலையில், காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மணிகண்டனை அவரது நண்பர்கள் தான் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து மனிகண்டனின் நண்பர்கள், மதுராந்தகத்தை சேர்ந்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எழிலரசன், பி.ஏ படித்து வரும் காமேஷ் மற்றும் தேவேந்திரன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்கள் காவல்துறையினரிடம் கூறுகையில், " நண்பர் ஒருவரது மனைவியுடன் மணிகண்டன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இதனை நாங்கள் கண்டித்தும் கேட்க வில்லை. எனவே அவனை கழுத்தை நெரித்து கொன்று ஏரியில் வீசினோம்'' என்றனர்.  மேலும், இந்த கொலையில் தலைமறைவாகயுள்ள முக்கிய குற்றவாளிகள்  2 பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.