1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : வெள்ளி, 6 மே 2022 (08:44 IST)

சென்னை ஐஐடி வளாகத்தில் மாணவிக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை: அதிர்ச்சி தகவல்

Chennai IIT
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்துள்ளதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
சென்னை ஐஐடியில் படித்து வரும் மாணவி ஒருவர் தனக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது 
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியிடம் புகைப்பட ஆதாரத்தை ஐஐடி நிர்வாகம் கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது 
 
இது குறித்து அந்த மாணவி கூறிய போது தன்னை போல் பல மாணவிகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் துணை ஆணையரிடம் அந்த மாணவி இதுகுறித்து புகார் அளித்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
சென்னை ஐஐடி வளாகத்தில் ஏற்கனவே பல சர்ச்சைகளில் இருந்து வரும் நிலையில் தற்போது மாணவி ஒருவருக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டால் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது