பாடல் கேட்டுக்கொண்டு மாடியில் நடந்த மாணவர் பலி
நெய்வேலி அருகே பாடல் கேட்டுக்கொண்டு நடந்த மானவர், மாடியில் இருந்து தவறி விழுந்ததில் மரணமடைந்தார்.
நெய்வேலி மாவட்டத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவர் வீட்டின் மாடியில் அ.லூயிஅப்துல்கரிம் உசைல்அர் எர்யனி(25) என்பவர் தங்கி இருந்துள்ளார். இவர் தனியார் கல்லூரியில் பிபிஏ படித்து கொண்டிருந்தார். வெள்ளிக்கிழமை இரவு தனது செல்போனில் பாடல் கேட்டுக்கொண்டே மொட்டை மாடியில் நடந்தவர் கால்தவறி கீழே விழுந்துள்ளார்.
உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு நெய்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இருந்தும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சீனுவாசன் கொடுத்த புகாரின்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.