சென்னையில் நாய்கள் தொல்லை அதிகரித்து வருவது குறித்து நடவடிக்கை எடுக்க மேயர் பிரியாவுக்கு எம்.பி கார்த்திக் சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் கடந்த சில மாதங்களாக தெருநாய்கள், வளர்ப்பு நாய்களால் மக்கள் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. தெருநாய்கள் முன்பெல்லாம் தெருவுக்கு ஒன்று, இரண்டு சுற்றி வந்த நிலையில், தற்போது பெருகி 10க்கும் மேற்பட்ட நாய்கள் சில பகுதிகளில் கூட்டமாக உலா வருகின்றன.
இந்நிலையில் சென்னையில் தெருநாய்களை கட்டுப்படுத்துவது குறித்து மேயர் பிரியாவுக்கு காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார். அதில் சென்னையில் மட்டும் சுமார் 1.80 லட்சத்திற்கும் அதிகமான தெருநாய்கள் உள்ளதாகவும், அதில் சுமார் 73 சதவீத நாய்கள் கருத்தடை செய்யப்படாதவை என்பதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் ஆபத்தையும் சுட்டிக் காட்டியுள்ளார்.
சென்னையில் வளர்ப்பு பிராணிகள் வளர்க்க உரிமம். கட்டணம், வளர்ப்பு நாய்களுக்கு வாய்மூடி போடுதல் என பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தெருநாய்கள் விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Edit by Prasanth.K