1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: சனி, 24 செப்டம்பர் 2016 (20:08 IST)

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியீடு!

தங்கம் வென்ற மாரியப்பனுக்கு தபால் தலை வெளியீடு!

ரியோவில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியா சார்பில் தங்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு தபால் தலை வெளியிட்டு கௌரவித்துள்ளனர்.


 
 
தங்கம் வென்று இந்தியா திரும்பிய மாரியப்பன் பிரதமர் மோடியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. இதுவரை 20000 வாழ்த்துக்கள் அடங்கிய லட்டர்களை இ.போஸ்ட் மூலம் அனுப்பியுள்ளனர்.
 
இந்த தபால்களை அதிகாரிகள் நேரடியாக மாரியப்பனின் வீட்டிற்கே சென்று அளித்து வாழ்த்து தெரிவித்தனர். மேலும் மாரியப்பனின் உருவம் பொறித்த தபால் தலையை சேலத்தில் வெளியிட்டு அவரை கௌரவித்துள்ளனர்.