இந்தியாவின் எதிர்ப்பை மீறி பாகிஸ்தானுக்கு கடன்.. ரூ.8,700 கோடி விடுவித்த சா்வதேச நிதியம்
சர்வதேச நிதியம் பாகிஸ்தானுக்கு வழங்க உள்ள 7 பில்லியன் அமெரிக்க டாலர் அதாவது சுமார் ரூ.59,800 கோடி கடனில், இரண்டாவது தவணையாக 1.023 பில்லியன் டாலர் அதாவது சுமார் ரூ.8,700 கோடி தொகையை தற்போது வழங்கியுள்ளது.
இதற்கு முன்னதாக, முதற்கட்டமாக ஏற்கனவே 1.1 பில்லியன் டாலர் அளவில் கடன் வழங்கப்பட்டு இருந்தது. இதனால், தற்போது வரை பாகிஸ்தான் பெற்றிருக்கும் மொத்த கடன் தொகை 2.1 பில்லியன் டாலரை அதாவது சுமார் ரூ.17,900 கோடி என எட்டியுள்ளது.
மேலும், இயற்கை பேரழிவுகள் மற்றும் பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு உதவுவதற்கான திட்டத்தின் கீழ், பாகிஸ்தானுக்கு கூடுதலாக 1.4 பில்லியன் டாலர் வழங்க சர்வதேச நிதியம் ஒப்புதல் அளித்துள்ளது என்று அந்நாட்டின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை, பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா கடன் வழங்குதலை எதிர்த்த நிலையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Edited by Siva