செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 17 ஜூன் 2021 (08:39 IST)

ஸ்டாலினுக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்கும் ஒன்றிய அரசு!

சென்றுள்ள் தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலினுக்கு மத்திய அரசு இசட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்க உள்ளது.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்ற பிறகு அவர் மேற்கொள்ளும் முதல் வெளி மாநிலம் மற்றும் டெல்லி பயணம் இதுவாகும். இந்த பயணத்தின்போது பிரதமர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளார். மோடியுடனான சந்திப்பில் நீட் தேர்வு ரத்து, தமிழகத்துக்கு கூடுதல் நிதி ஆகியவை பற்றி பேச உள்ளாராம்.

இந்நிலையில் டெல்லியில் ஒன்றிய அரசு ஸ்டாலினுக்கு இசட் ப்ளஸ் பாதுகாப்பு அளிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.