ஞாயிறு, 2 ஏப்ரல் 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified புதன், 30 மே 2018 (07:13 IST)

வேல்முருகனை நேரில் சென்று நலம் விசாரித்தார் ஸ்டாலின்

சென்னை  ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகனை தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.
காவிரி போராட்டத்தில் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் இருக்கும் தமிழக வாழ்விரிமைக் கட்சியின் தலைவர்  வேல்முருகன் தூத்துக்குடியில் மக்கள் கொல்லப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிறையில் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.
 
இந்நிலையில் சிறையில் அவரை சந்தித்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ விடுத்த வேண்டுகோளை ஏற்று உண்ணாவிரத்தை கைவிட்டார் வேல்முருகன். பின் வேல்முருகனுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட்டதால் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 
 
இதனையடுத்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேல்முருகனை  தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். வேல்முருகன் விரைவில் உடல் நலம் தேறி வீடு திரும்ப பிராத்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.