கொலை குற்றவாளி அமைச்சராக இருக்கிறார்: மு.க.ஸ்டாலின் காட்டம்!
கொலை குற்றவாளி அமைச்சராக இருக்கிறார்: மு.க.ஸ்டாலின் காட்டம்!
மூன்று நாள் ரம்ஜான் விடுமுறைக்கு பின்னர் தமிழக சட்டசபை இன்று மீண்டும் கூடியது. இந்த கூட்டத்தில் குட்கா போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக பேச அனுமதி மறுக்கப்பட்டதால் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தனர்.
தடையை மீறி குட்க விற்பனை செய்ய சுகாதாரத்துறை அமைச்சர் லஞ்சம் வாங்கியதாக செய்திகள் வெளியானது. இந்த விவகாரத்தை மு.க.ஸ்டாலின் சட்டசபையில் விவாதிக்க அனுமதி கேட்டார் ஆனால் அதற்கு சபாநாயகர் மறுத்துவிட்டார்.
இதனையடுத்து வெளிநடப்பு செய்துவிட்டு செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், வருமான வரித்துறை அதிகாரிகள் கைப்பற்றிய டைரியிலும், கணக்கு புத்தகத்திலும் ஊழல் பட்டியலில் முதலிடத்தில் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் பெயர் உள்ளது.
குட்கா நிறுவனம் சார்பில், போலீஸ் கமிஷனருக்கு தீபாவளி மாமூல் ரூ.15 லட்சம், கிறிஸ்துமஸ் மாமூல் ரூ.15 லட்சம் கொடுக்கப்பட்டது. டிசம்பர் 2016-இல் மட்டும் 1.14 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்தாக அந்த டைரியில் இருக்கிறது.
சுகாதாரத்துறை அமைச்சர், மக்கள் உடல் நலன் சார்ந்த பிரச்னையில் துரோகம் செய்துள்ளார். உயிரைக் காப்பாற்ற வேண்டிய அமைச்சர் கொலை குற்றவாளி அமைச்சராக உள்ளார். அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றார்.