செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 30 மே 2019 (14:51 IST)

ஸ்டாலின் விரைவில் முதல்வராக வேண்டும் - ஆந்திர முதல்வர் ஆசை !

கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி இந்தியாவில் தொடங்கிய மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று மே 19 ஆம் தேதி முடிவடைந்தது. பிறகு உலகமே எதிர்பார்த்த இந்தியாவின் அடுத்த பிரதமர் யார் என்பதற்கான பாராளுமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 23 ஆம் தேதி வெளியானது. அதில் பாஜக கூட்டணி சார்பில் 354 தொகுதிகளும், பாஜக தனிப்பெரும்பான்மையாக 303 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இதற்கு பல்வேறு நாட்டு தலைவர்கள் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். 
கடந்த தேர்தலில்(2014) காங்கிரஸ் 44 இடங்களில்வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்து பெறமுடியாமல் போனது. அதேபோல் இந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெறும் 52 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றது.  எதிர்க்கட்சியாக மொத்தமுள்ள இடங்களில் 10% இடங்கள் (55) பெற்றிருக்கவேண்டும்  என்பதால் காங்கிரஸால் அந்த வாய்ப்பை இழந்தது.
 
ஆனால் தமிழ்நாட்டில் திமுக கூட்டணியி இடம்பெற்ற காங்கிரஸ் தேனி தொகுதியை தவிர மற்ற இடங்களில் ஏகபோகமாக வெற்றிபெற்றது.
 
ஓட்டுமொத்தமாக திமுக வேலூர் தவிர 38 இடங்களில் ( புதுச்சேரி)அமோக வெற்றிபெற்றது. தற்போது இந்தியாவில் 3வது மிகப்பெரிய கட்சியாக திமுக உருவெடுத்துள்ளது.
 
இந்நிலையில் மோடி இன்று அமைச்சரவையில் பதவியேற்கவுள்ளதால் பல முக்கியத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
 
ஆனால் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இந்நிலையில் அண்டைமாநிலமான ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற - மக்களவைத் தேர்தலில் மிகப்பெரும் வெற்று இன்று ஆட்சி பொறுப்பேற்கவுள்ள ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி அன்புடன் மரியாதை நிமித்தமாக ஸ்டாலினுக்கு அழைப்புவிடுத்தார்.
 
நல்லமுறையில் இன்று காலைமுதல் இப்பதவியேற்பு விழா நடைபெற்றுவருகிறது. இதில் கலந்துகொண்ட ஸ்டாலின் ஜெகனுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார். 
 
இதனையடுத்து பேசிய ஜெகன்மோகன் ரெட்டி, கடவுள் ஆசீர்வாதத்தில் ஸ்டாலின் விரைவில் முதல்வராக வேண்டும் என்று கூறினார்.