1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Modified: வியாழன், 6 மே 2021 (20:44 IST)

சினிமா சந்தர்ப்பவாதிகளிடம் ஸ்டாலின் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்: அருணன்

சினிமாவில் இருக்கும் சந்தர்ப்பவாத சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் இடம் தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் ஸ்டால்லின் எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென அருணன்கதிரவன் தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார் 
 
தமிழக முதல்வராக பதவி ஏற்க இருக்கும் முக ஸ்டாலின் அவர்களுக்கு சினிமா துறையில் இருந்த பலர் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். நேரில் வந்தும் சமூக வலைதளங்கள் மூலம் ஸ்டாலின் அவர்களுக்கு தொடர்ச்சியாக திரையுலகினரின் பாராட்டுகள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் அதே நேரத்தில் திரையுலகைச் சேர்ந்த யாரும் தேர்தலுக்கு முன் திமுகவுக்கு எந்த வித ஆதரவும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அருணன் கதிரேசன் தனது டுவிட்டரில் இதுகுறித்து கூறியதாவது
 
பல சினிமாக்காரர்களும், பிரபலங்களும் திமுக தலைவருக்கு வாழ்த்து சாெல்வதையும் காேரிக்கை வைப்பதையும் பார்க்க வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் எல்லாம் தேர்தல் வேளையில் எங்கே பாேயிருந்தார்கள்? இந்த சந்தர்ப்பவாதிகள், பிழைப்புவாதிகளிடம் ஸ்டாலின் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.