ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 9 டிசம்பர் 2019 (08:51 IST)

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – ஸ்டாலின் சொன்ன அந்த ஒரு வார்த்தை !

திமுகவில் உள்ள சிலரே எடப்பாடி பழனிச்சாமியோடு மறைமுகமான தொடர்பில் உள்ளதாக சொல்லப்படுகிறது.

திமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நேற்று மாலை சென்னையில் ஜெகத்ரட்சகனின் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு பேசினார். உள்ளாட்சித் தேர்தல் சம்மந்தமாக பல விஷயங்கள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. கூட்டத்தில் பேசிய ஜெ அன்பழகன், நமது கூட்டணியில் இருக்கும் ஒரு தலைவர் (திருமாவளவன்) எடப்பாடியைச் சந்தித்து பேசியுள்ளார். அவர்களை எல்லாம் கூட்டணியை விட்டுக் கழட்டிவிட்டால்தான் நாம் உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெறமுடியும்’ எனக் கூறியதாக சொல்லப்படுகிறது.

இதையடுத்துப் பேசிய ஸ்டாலின் ‘கூட்டணிக் கட்சியினரை விடுங்கள் நமது கட்சியினர் சிலரே எடப்பாடி பழனிச்சாமியோடு மறைமுகமாக தொடர்பில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அதை இன்றோடு நிறுத்திவிடுங்கள் என எச்சரிக்கிறேன்.’ எனக் பதிலுறைத்ததாக சொல்லப்படுகிறது. வந்திருந்தவர்கள் அனைவரும் ஸ்டாலின் யாரை சொல்கிறார் என்ற குழப்பத்தில் சென்றனர்.