ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 29 மார்ச் 2021 (09:00 IST)

எடப்பாடியில் ஸ்டாலின்… கொளத்தூரில் பழனிச்சாமி – களைகட்டிய பிரச்சாரம்!

அரசியல் தலைவர்களில் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரங்கள் தமிழக வீதிகள் பரப்பாகியுள்ளன.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 6 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஒரு சுவாரஸ்யமான நிகழ்வு நடந்துள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவரை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளருக்கு வாக்கு சேகரித்தார்.

அதேபோல முதல்வரின் தொகுதியான எடப்பாடியில் திமுக வேட்பாளருக்காக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.