புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (20:39 IST)

மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா: இம்முறை சிக்கியவர் ஸ்ரீவில்லிபுத்தூர் வேட்பாளர்

மேலும் ஒரு வேட்பாளருக்கு கொரோனா:
தமிழகத்தில் ஏற்கனவே ஒரு சில வேட்பாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ள நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதித்துள்ளது
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் சந்தோஷ் பாபு உள்பட ஒரு சிலருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ள தகவலை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் என்பவருக்கு கொரோனா  உறுதியாகி உள்ளது 
 
இதனை அடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் தேர்தல் தேதி என்று அவர் கொரோனா பாதுகாப்பு கிட்அணிந்து வாக்களிப்பார் என்றும் தேர்தல் பிரச்சாரத்தை ஆன்லைன் மூலம் செய்வார் எதிர்பார்க்கப்படுகிறது 
 
தேர்தல் நேரத்தில் வேட்பாளர்கள் சிலருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது