இலங்கை பொருளாதார நெருக்கடி; தமிழகம் தப்பி வந்த 4 பேர்!
இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக பலர் தமிழகம் தப்பி வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் ஏற்றுமதி, இறக்குமதி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய பொருட்களுக்கே திண்டாடும் நிலையில் பல பகுதிகளிலும் அரசை எதிர்த்து போராட்டங்களை தொடங்கி உள்ளனர். இதனால் இலங்கை அரசே கவிழும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பலர் இலங்கையை விட்டு அகதிகளாக வெளியேறும் சூழல் எழுந்துள்ளது. இந்நிலையில் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து தப்பி படகு வழியாக தனுஷ்கோடி வந்த இலங்கை தம்பதியரை போலீஸார் தடுத்து நிறுத்தி அகதிகள் முகாமில் ஒப்படைத்துள்ளனர்.