1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 22 பிப்ரவரி 2022 (08:51 IST)

கடல் கடந்து காதல்; டூரிஸ்ட் விசாவில் வந்து திருமணம்! – காதல் ஜோடிக்கு ஏற்பட்ட சிக்கல்?

தமிழக இளைஞரும் இலங்கை பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் பெண் டூரிஸ்ட் விசாவில் வந்ததால் திரும்ப செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

ஓமலூர் அருகே உள்ள பஞ்சுகாளிப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவருக்கு முகநூல் மூலமாக இலங்கை பருத்தித்துறையை சேர்ந்த நிஷாந்தினி என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக ஒருவரை ஒருவர் நேரில் பார்க்காமலே காதலித்து வந்த நிலையில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இரு வீட்டாரும் சம்மதித்துள்ளனர். இதனால் இலங்கியில் இருந்து டூரிஸ்ட் விசாவில் வந்து நிஷாந்தினி சரவணனை திருமணம் செய்து கொண்டுள்ளார்.

பின்னர் இந்த திருமணத்தை பதிவு செய்ய சென்றபோது தடையில்லா சான்று இருந்தால்தான் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என கூறப்பட்டுள்ளது. டூரிஸ்ட் விசா முடிவடைய உள்ள நிலையில் தடையில்லா சான்று கேட்டு காதல் ஜோடி காவல் நிலையத்தை அணுகியுள்ளனர்.