திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 3 ஜூலை 2022 (09:21 IST)

இலங்கையில் இருந்து அகதியாக பெண் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!

refugee died
இலங்கையில் இருந்து அகதியாக பெண் உயிரிழப்பு: அதிர்ச்சி தகவல்!
கடந்த சில நாட்களாக இலங்கையில் இருந்து அகதிகள் தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கும் நிலையில் இலங்கையில் இருந்து அகதியாக வந்த பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இலங்கையில் கடந்த சில மாதங்களாக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அதன் காரணமாக அந்நாட்டின் வாழ முடியாமல் பலர் தமிழகத்துக்கு அகதிகளாக வந்து கொண்டிருக்கின்றனர் 
 
அவ்வாறு அகதிகளாக வந்தவர்கள் அவர்கள் முகாமில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் இலங்கையில் கடந்த வாரம் அகதியாக தமிழகத்திற்கு வந்த 82 வயது மூதாட்டி பரமேஸ்வரி என்பவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
 
இலங்கையிலிருந்து பரமேஸ்வரி மற்றும் அவரது கணவர் பெரியண்ணன் ஆகிய இருவரும் தமிழகத்திற்கு அகதியாக வந்த நிலையில் தற்போது பரமேஸ்வரி உயிரிழந்து விட்டதாகவும் அவரது கணவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.