1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. srilanka mp arjua mp comment against sangeetha

ஒரு தமிழனா சங்கீதாவை நினச்சி வெட்கப்படுறேன்!.. இலங்கை எம்.பி கோபம்

sangeetha vijay
நடிகர் விஜயை திருமணம் செய்து கொண்டு அவருடன் 27 வருடங்கள் குடும்பம் நடத்தியவர் சங்கீதா. இரண்டு குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகி இருக்கிறார்.விஜய்க்கு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் அதனால் தங்களின் திருமண வாழ்க்கை பாதிக்கப்பட்டதாகவும், விஜய் தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் பரபரப்பு புகார்களை கூறியிருக்கிறார் சங்கீதா..

விஜய் அரசியலுக்கு வந்து இரண்டு வருடங்கள் ஆகிவிட்டது. வருகிற 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் ஒரு மாற்றத்தை உருவாக்குவார் என பலரும் எதிர்பார்த்தார்கள்.. அரசியலுக்கு புதிதாக வந்திருகும் விஜய்க்கு வாக்களிப்போம் என பலரும் கூறிவரும் நிலையில் சங்கீதா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை கிளம்பியிருக்கிறது.. விஜயின் மீது இருந்த நம்பிக்கையும் இது குறைத்திருக்கிறது. இந்நிலையில், சங்கீதா விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை அணுகியது தொடர்பாக இலங்கை தமிழர் அர்ச்சுனா எம்பி ஒரு வீடியோ வெளியிட்டிருக்கிறார்.

அதில் அவர் சங்கீதாவை மிகவும் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.. ஒரு இலங்கை தமிழனாக உனது செயலைப் பார்த்து வெட்கப்படுகிறேன்.. இலங்கையில் உன் வீடு எங்கே இருக்கிறது என சொல்.. நான் அங்கு வந்து உனக்கு மாலை அணிவித்து கோவில் கட்டுகிறேன். அந்த மனுஷன் இப்போதுதான் அரசியலில் வந்து கொண்டிருந்தார்.. அதில் அவர் வெற்றி பெறும் நேரத்தில் நீ இப்படி செய்து விட்டாய்.. அவர் உன்னை அடித்தே இருந்தாலும் நீ அவர் பக்கம் நின்றிருக்க வேண்டும்’ என்று பேசியிருக்கிறார்..

இந்த அர்ச்சுனா எம்.பி.தான் சில நாட்களுக்கு இலங்கை பாராளுமன்றத்தில் அனல் பறக்க பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
About Writer
Mahendran
அடுத்த கட்டுரையில்
தமிழகம் முழுவதும் போராட்டம்!.. களத்தில் இறங்கும் தவெக.. அரசியல் பரபர...