1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 4 அக்டோபர் 2023 (16:04 IST)

அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் ஸ்டாலின் ! பாஜக பிரமுகர் ..!

அண்ணாமலைக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ஸ்டாலின் இருக்கிறார் என  பாஜக பிரமுகர் எஸ்.ஆர்.சேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பெரிய உலகத் தலைவராக நினைத்துக் கொண்டு இருந்த ஸ்டாலினின் உண்மை முகத்தை அண்ணாமலை வெளிக்கொண்டு வருகிறார் !
 
தான் எதோ இன்டர்நேஷனல் தலைவர் போல , நேரடியாக மோடியை விமர்சித்துக் கொண்டு இருந்தார் ஸ்டாலின் !
 
ஆனால் மோடியின் போர்ப்படை தளபதியான அண்ணாமலை அவர்கள் , ஸ்டாலின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து , ஒட்டு மொத்த திமுகவையும் தனி ஆளாக கதற விட்டுக்கொண்டு இருக்கிறார் !
 
ஆனாலும் அண்ணாமலைக்கு ஒரு முறை நேரடியாக பதில் சொல்லி விட்டால், பிறகு அவர் முன்வைக்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் வரும் என்று திமுக பயந்து கொண்டு அமைதியாக இருந்தது !
 
ஆனால் பொறுமையை கைவிடாத அண்ணாமலை .... அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பது போல, தொடர்ச்சியாக ஆதாரங்களோடு #திமுக மீது குற்றச்சாட்டை வைத்துக் கொண்டே இருந்தார் !
 
எவ்வளவு நாள் தான் கேட்காதது போலவே ஸ்டாலின் நடித்துக் கொண்டிருப்பார் ?
 
செந்தில் பாலாஜி விடயத்திலேயே, அண்ணாமலை பற்ற வைத்த நெருப்புக்கு மத்திய பாஜகவை விமர்சித்து வீடியோ விட்டார் ஸ்டாலின் !
 
ஆனால் இப்பொழுது தொடர்ச்சியாக அண்ணாமலை அடித்துக் கொண்டிருக்கும் அடியில் ஆடிப் போய் உள்ளது திமுக & கோ
 
அண்ணாதுரை பற்றி ஒரு வரலாற்று உண்மை அண்ணாமலை பேசியது பற்றி முதல் முறையாக வாய் திறந்தார் ஸ்டாலின் !
 
அதேபோல திமுகவின் நாத்திக கொள்கையால், மருதமலை முருகன் கோயிலுக்கு எம்ஜிஆர் செல்ல முடியாமல் இருந்தது பற்றி அண்ணாமலை கூறியிருந்தார் !
 
அதைப் பற்றியும் ஸ்டாலின் பதில் சொல்ல வேண்டியது ஆகிவிட்டது !
 
இது ஒரு ஆரம்பம்  தான் !!
 
இனிமேல் அண்ணாமலை வைக்கப் போகும் ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும், விடப் போகும் ஒவ்வொரு அறிக்கைக்கும், பேச போகும் ஒவ்வொரு வார்த்தைக்கும் ஸ்டாலின் இடமிருந்து பதில் தானாக வரவைக்கப்படும் ! அண்ணாமலை வர வைப்பார் !
 
இவ்வாறு எஸ்.ஆர்.தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva