1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 1 நவம்பர் 2023 (21:03 IST)

சென்னையில் வாகனங்களின் வேக வரம்பு- போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

chennai
நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருகிறது.

தமிழகத்தில் தலை நகராக சென்னை விளங்குகிறது. சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை ஒரு முக்கிய அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி. வரும்  நவம்பர் 4 முதல் அமலுக்கு வருகிறது வாகனங்களின் வேக வரம்பு அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அறிவித்துள்ளதாவது:

இலகுரக வாகனங்கள் 60 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். கனர க வகனங்கள் 50 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். ஆட்டோக்கள் 40 கிமீ வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும் எனவும்,  குடியிருப்பு பகுதிகளில் அனைதது வகையான வாகனங்களும் 30 கிமீ வேகத்தில்  மட்டுமே செல்ல வேண்டும் என்று தெரிவித்துள்ளது.