1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Special train from TN to other states announcement

தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்: தெற்கு ரயில்வே அறிவிப்பு

ரயில்
தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு சிறப்பு ரயில்
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இன்னும் ரயில்வே துறையில் இயல்பு நிலை திரும்பவில்லை. தற்போதைக்கு சிறப்பு ரயில்கள் மட்டுமே இயங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பண்டிகை கால சிறப்பு ரயில் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 
இதன்படி மதுரையில் இருந்து பிகானேருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை - பிகானேர் இடையே அக்டோபர் 22, 29 மற்றும் நவம்பர் 05, 12, 19, 26 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
 
அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து புவனேஸ்வர் மற்றும் நெல்லையில் இருந்து ஜாம்நகர் இடையே பண்டிகை கால சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
 
மேலும் சென்னை- கயா, புவனேஷ்வர்- புதுச்சேரி ஆகிய மார்க்கங்களிலும், சென்னை-கயா சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில்கள் பண்டிகை காலங்களில் சொந்த ஊர் செல்லும் பயணிகளுக்கு உதவும் என்பது குறிப்பிடத்தக்கது
அடுத்த கட்டுரையில்
ஆன்லைன் ரம்மி விளையாட்டில் தோல்வி: தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட இளைஞரால் பரபரப்பு