1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:58 IST)

குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா? சிபிஐ-க்கு நீதிமன்றம் கடும் கண்டனம்!

vijayabaskar
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கை 3 ஆண்டுகளாக இழுத்தடிப்பதா என்று சிபிஐ-க்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
 
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி விஜயபாஸ்கர், பி வி ரமணா மீதான குட்கா வழக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இழுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சிபிஐ அமைப்புக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது 
 
ஆளுநர் ஒப்புதல் அளித்தும் சிபிஐ இன்னும் பரிசீலனை செய்து வருவதாக நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளதால் கோபமடைந்த நீதிபதி வழக்கின் நிலை என்ன என்பது தொடர்பாக அடுத்த விசாரணையின் போது பதில் அளிக்க வேண்டும் என்று சிபிஐக்கு நீதிபதி உத்தரவு பெற்றுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா, பான் பொருள்கள் தடையை மீறி விற்பனை செய்ய சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர்,  ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்ட்டது. இந்த வழக்கை லஞ்ச ஒழுப்புத்துறை விசாரித்து வந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்  சிபிஐக்கு மாற்றபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva