1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: வெள்ளி, 23 டிசம்பர் 2016 (12:30 IST)

ரஜினியின் மகள் நீதிமன்றத்தை நாடினார்: விவாகரத்து கோரி மனு!

ரஜினியின் மகள் நீதிமன்றத்தை நாடினார்: விவாகரத்து கோரி மனு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகளான சௌந்தர்யா ரஜினிகாந்த் விவகாரத்து கோரி சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் இன்று மனு செய்துள்ளார்.


 
 
ரஜினிகாந்தின் இளைய மகளான செளந்தர்யாவுக்கும் தொழிலதிபரான அஸ்வின் ராம்குமாருக்கும் கடந்த 2010-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் சௌந்தர்யாவுக்கு அவரது கணவர் அஸ்வின் ராம்குமாருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
 
கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். கடந்த செப்டம்பர் மாதம் சௌந்தர்யாவும் அஸ்வினும் பிரிந்து வாழ்ந்து வந்தது வெளியுலகத்துக்கு தெரியவர இது பரபரப்பாக பேசப்பட்டது. இதனை செப்டம்பர் மாதம் 16-ஆம் தேதி தனது டிவிட்டர் பதிவு மூலம் உறுதி செய்தார் செளந்தர்யா ரஜினிகாந்த்.
 
இதனையடுத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் விலங்குகள் நலவாரிய தூதுவராக நியமிக்கப்பட்டார். தற்போது விஐபி இரண்டாம் பாகத்தில் பரபரப்பாக இயங்கி வருகிறார். இந்நிலையில் இன்று காலை சென்னை குடும்ப நல முதன்மை நீதிமன்றத்தில் கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து வேண்டும் என செளந்தர்யா ரஜினிகாந்த் மனு கொடுத்துள்ளார்.