1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 24 நவம்பர் 2023 (07:45 IST)

எந்தெந்த பகுதி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை? நீலகிரி மாவட்ட நிர்வாகம் தகவல்..!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வந்த நிலையில் நேற்று இன்று மழை குறைந்துள்ளதால் தமிழக முழுவதும் இன்று பள்ளி கல்லூரிகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
நேற்று 7 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் ஒரு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இன்று நீலகிரி மாவட்டம் உட்பட அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. 
 
ஆனால் அதே நேரத்தில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர், கோத்தகிரி ஆகிய இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு குறைந்துள்ளதால் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்படும் என்றும் சேத விவரங்கள் குறித்து தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். மேலும் தேவைப்பட்டால் இன்னும் ஒரு சில பகுதிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு பின்னர் வெளியாகும் என்றும் மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva