செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 18 பிப்ரவரி 2020 (11:54 IST)

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாம்பு: பெரும் பரபரப்பு

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பாம்பு
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகளில் பாம்பு ஒன்று சிக்கியிருந்தது பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில்வே நிலையம் சப்வே அருகில் உள்ள நகரும் படிக்கட்டு இன்று காலை பழுதாகி நின்றதை அடுத்து அதனை பழுது செய்ய தொழில்நுட்ப பணியாளர்கள் வந்தனர்.
 
அந்த படிக்கட்டுக்களை தொழில்நுட்ப பணியாளர்கள் சோதனை செய்து பார்த்த போது 4 அடி நீளமுள்ள பாம்பு ஒன்று இறந்த நிலையில் இருந்ததால் தொழில்நுட்ப பணியாளர்கள்  அதிர்ச்சி அடைந்தனர்.
 
சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் உயர் தொழில்நுட்ப வசதிகள் இருந்தும்,  எந்த நேரமும் தீவிர சோதனை இருந்தும், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கடந்து செல்லும் பிசியான இடமாக இருந்தும்  நகரும் படிக்கட்டுகளில் பாம்பு இருந்த சம்பவம், பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.