வெள்ளி, 21 பிப்ரவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 13 ஜனவரி 2025 (07:53 IST)

முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ்: தம்பிதுரை தகவல்

thambidurai
டங்க்ஸ்டன் விவகாரத்தில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் அளிக்க இருப்பதாக அதிமுக எம்பி தம்பிதுரை கூறியுள்ளார்.

மதுரையில் டங்க்ஸ்டன் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த விவகாரத்தில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகின்றன.

குறிப்பாக பாராளுமன்றத்தில் கனிமவள மசோதாவுக்கு அதிமுக எம்பி தம்பிதுரை ஆதரித்து பேசியதாக திமுகவினர் கூறுகின்றனர். சமீபத்தில் நடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட முதல்வர் ஸ்டாலின் அதை தெரிவித்த போது அதிமுக கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் இது குறித்து அதிமுக எம்பி தம்பிதுரை கூறிய போது டங்க்ஸ்டன் சுரங்க விவகாரம் வர நான் தான் காரணம் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் பேசியதை முழுமையாக மறுக்கிறேன். தமிழக சட்டசபையில் உறுப்பினர் அல்லாத என்னைப் பற்றி பொய்யான குற்றச்சாட்டை முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கூறியுள்ளார். எனவே அவர் மீது பாராளுமன்றத்தில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்’ என்று கூறியுள்ளார்.


Edited by Siva