1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 6 செப்டம்பர் 2023 (07:36 IST)

4 நகரங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..!

சிவகங்கை உள்ளிட்ட நான்கு நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.  
 
சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, இளையான்குடி ஆகிய நகரங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தை முன்னிட்டு செப்டம்பர் 11ஆம் தேதி விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அவர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  
 
இமானுவேல் சேகரனை நினைவு தினத்தை ஒட்டி இந்த விடுமுறை அளிக்கப்படுவதாகவும் இந்த விடுமுறைக்கு பதிலாக செப்டம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை அன்று பள்ளி கல்லூரிகள் இயங்கும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவித்துள்ளார். 
 
ஒவ்வொரு ஆண்டும் இமானுவேல் சேகரன் நினைவு தினத்தை ஒட்டி சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஒரு சில நகரங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது
 
Edited by Siva