1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 23 ஜனவரி 2018 (11:18 IST)

சுராங்கனி புகழ் பாப் பாடகர் சிலோன் மனோகர் காலமானார்...

இலங்கையை சேர்ந்த பிரபல பாப் பாடகரான சிலோன் மனோகர் நேற்று சென்னையில் காலமானார்.

 
இலங்கையை சேர்ந்த மனோகர் ஏராளமான பாப் பாடல்களை பாடியுள்ளார். தமிழ் பாடல்களும் பாடியுள்ளார். மேலும், ஜெ ஜெ உள்ளிட்ட சில தமிழ் சினிமாக்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கு இலங்கை மட்டுமின்றி, தமிழகத்திலும் பல ரசிகர்கள் உள்ளனர்.
 
முக்கியமகாக இவர் பாடிய சுராங்கனி.. சுராங்கனி.. சுராங்கனிடா மாலுகெனாவா.. என்ற பாடல் இவருக்கு பல ரசிகர்களை பெற்றுத்தந்தது. 73 வயதடைந்த மனோகர் நேற்று இரவு சென்னையில் காலமானார்.