1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 29 ஜூலை 2021 (12:23 IST)

கீழடியில் முதன் முறையாக வெள்ளி நாணயம் கண்டெடுப்பு! – மக்கள் வியப்பு!

கீழடியில் தொடர்ந்து அகழாய்வு பணிகள் நடைபெற்று வரும் நிலையில் வெள்ளி காசு கண்டெடுக்கப்பட்டது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தின் கீழடியில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் தமிழர்களின் பண்டைய கால வாழ்க்கை, பண்பாடு குறித்த பல்வேறு சான்றுகள் கிடைத்துள்ளன. தொடர்ந்து பண்டைய கால எலும்புகள், பானைகள் உள்ளிட்ட பொருட்கள் கிடைத்து வந்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் ஒன்று கிடைத்துள்ளது.

முன்னதாக தங்க காசு ஒன்று கிடைத்திருந்த நிலையில் தற்போது வெள்ளி நாணயம் கிடைத்துள்ளது பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த வெள்ளி நாணயம் பொ.யு.மு 4ம் நூற்றாண்டை சேர்ந்ததாக இருக்கலாம் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.