திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (22:14 IST)

இதைவிட வெட்கக்கேடு வேறெதுவும் இல்லை: மோடியை கடுமையாக விமர்சித்த தமிழ் நடிகர்!

மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். இன்று கோவையில் அவரது பிரச்சாரத்திற்கு நல்ல வரவேற்பு இருந்த நிலையில் நேற்று அவர் மகாராஷ்டிரா மாநிலத்தில் செய்த பிரச்சாரம் ஒன்றை நடிகர் சித்தார்த் தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்தார்
 
ஏற்கனவே புல்வாமா தாக்குதல் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் பேசக்கூடாது என்று தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தும் நேற்று பேசிய பிரதமர் மோடி இளைஞர்களை பார்த்து கூறியபோது, '"உங்கள் முதல் ஓட்டை பாலகோட் விமானப்படை தாக்குதல் செய்தவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா?, புலவாமா தாக்குதலில் மரணத்திவர்களுக்காக அர்ப்பணிக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பினார்
 
நாட்டிற்காக வீரமரணம் அடைந்து உயிர்த்தியாகம் செய்த ராணுவ வீரர்களை குறிப்பிட்டு பிரதமர் ஓட்டு கேட்டதை பல சமூக வலைத்தள பயனாளிகள் கடுமையாக விமர்சனம் செய்துள்ள நிலையில் இதுகுறித்து சித்தார்த் தனது டுவிட்டரில், 'உயிர்த்தியாகம் செய்த போர் வீரர்களை வைத்தும், நமது விமானப் படையை வைத்தும் பிரதமர் ஓட்டுக் கேட்கிறார். ஏதோ நமது படைகள் இவருக்கும் இவரது கட்சிக்கும் சொந்தமானது போல நினைத்து கொள்கிறார். தேர்தல் ஆணையம் உடனே விழித்து கொள்ள வேண்டும். இந்தியாவுக்கு இதை விட தகுதி வாய்ந்தவர்கள் தேவை. ஜனநாயகம் என்பது மாறுவதும் மாற்றப்படுவதும்தான். என்ன ஒரு வெட்கக் கேடு" என்று பதிவு செய்துள்ளார்.
 
நடிகர் சித்தார்த்தின் இந்த டுவீட்டுக்கு பெரும் ஆதரவு கிடைத்து வருகிறது